Saturday, 1 June 2019

பாளையங்களும் பாளையக்காரர்களும்

-------------------------------------
Polingars and their territories - historical development and significance as a continuation of Nayakas rule.
------------------------------------



  கடந்த இரண்டு மாதங்களாக (பள்ளி விடுமுறை என்பதால்.. கிடைக்கும் நாட்களில்) பல்வேறு பாளையக்காரர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட வரலாறுகளை தேடி பயணித்துக்கொண்டிருக்கிறேன்.


அதில் நான் கண்டது...
ஜமின்கள் மற்றும் பாளையக்காரர்களிடம் பணி செய்த மந்திரிகள் அல்லது தானாதிபதிகள் அல்லது கணக்குபிள்ளைகள் பற்றிய தகவல்கள்... ஜமின்கள்/ பாளையக்காரர்களின் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனைகளையும் முடிவுகளையும் எழுதியதாக இருக்கிறது என்பது தான்.

அதன் தொடர்ச்சியாக.....

வீரபாண்டிய கட்டபொம்மனையும் அவரின் பாஞ்சாலங்குறிச்சியையும் ஏறக்குறைய அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் தானாதிபதி சிவ சுப்பிரமணிய பிள்ளை அவர்களின்... வரலாறு...
மிக முக்கியமானதும் ... பெரிதும் வெளித்தெரியாதும் நிறைய....


இன்று சிவ சுப்பிரமணிய பிள்ளை வீடு (அரண்மனை) காண நேர்ந்தது.
அவரின் ஆறாவது தலைமுறை திரு வள்ளியமாளுடன் என் குழந்தைகள் கலந்துரையாடி கதைகள் கேட்டறிந்தனர்.
இந்திய விடுதலை போர் மிக சுவாரசியமானது.

பாடப்புத்தகங்கள் படிப்பிக்கும் வரலாற்று உண்மைகள் வேறு. நிஜமான கள வரலாறு வேறு.
வரலாறு...
எனக்கு ......
அதன்...
மனிதர்களை மனிதர்களாகவே
காண்பிக்கிறது...

சூழ்ச்சிகள்... சூட்சுமங்கள்...
நம்பிக்கை... நம்பிக்கை மோசம்... துரோகம்...
இவைகள்... நிறைந்த
வாழ்க்கைகளை
இரத்தமும் சதையுமாக...
காண்பிக்கிறது.

இதில் நாயக வழிபாடு எல்லாம் துளியும் கிடையாது.
No Heros...
Just Men and Women and Events..

வ.உ.சிதம்பரம். கப்பலோட்டிய தமிழன்...

 
இந்திய விடுதலைக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் முற்றிலுமாக இழந்த மனிதன்.

கடைசி காலத்தில் ஆங்கிலேய நீதிபதி (justice Wallace) ஒருவரே உதவினார். அதன் நன்றிக்கடனாக தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். அன்றாட வாழ்க்கைக்காக சட்ட புத்தகங்களை விற்கும் நிலைக்கு ஆளானார். அவர் ஒட்டிய கப்பலின் மதிப்பு இப்போதைய பண மதிப்பில் 5000 கோடியாகும். 

பாடப்புத்தகங்கள் கொடுக்கும் வரலாற்றை விட நேரடியாக களத்தில் காணும் வரலாறு எதையும் மறைக்கவோ, மடைமாற்றவோ முயலுவதில்லை.

என் குழந்தைளிடம் இவற்றை பற்றி பேசுகிறேன். அவர்களும் நிறைய கேள்விகள் கேட்கின்றனர்.

வரலாற்று மனிதர்களின் வழியாக வாழ்வியலைக் கற்றபடி...தொடர்கிறது... எங்கள் வரலாற்று பயணங்கள்..
One’s destination is never a place, but a new way of seeing things.’ - Henry Miller
பயணம் என்பது ஒருவித உணர்வு,
பயணம் என்பது ஒருவித அறிவுச் சார்ந்த செயல்..
It is a feel and an act of intellect.
.
ஒவ்வொரு பயணமும் என்னை மறுவுருவாக்கம்/மீள்வுருவாக்கம் செய்கிறது.
என்னுள் நான் மீண்டும் மீண்டும் பிறக்கிறேன் அல்லது என்னை நானே பிரசவித்துக்கொள்பவனாகிறேன்.


சில நேரங்களில்...

ஈவு இரக்கமின்றி கல்வாரிக்கு இழுத்துசெல்லப்படுகிறேன்.
கொல்லப்பட்டு மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுபவனாகிறேன்.
பயணம் என்பது பரந்துபட்ட விசாலமான பார்வை.
பயணம் என்பது கட்டற்ற விடுதலை (சுதந்திரம்).
ஒரு இடத்தை மனதில் கொண்டு என் பயணத்தை நான் முடிவுசெய்வதில்லை. மாறாக என்னுள் ஏற்படும் மாற்றங்களின் ஊற்றுக்கண்களை மனதில் கொண்டே பயணம் செய்கிறேன்.

இதை நீங்கள் புரிந்துகொள்வது சற்றுக் கடினம் தான்.
புதிய பார்வைகளையும், புரிதல்களையும் ஒவ்வொரு நிலவெளியும் (landscape) என்னில் உருவாக்குகிறது.

சில நிலவெளிகளில் (certain landscape)..
ஒரு நேரம்...
மனிதர்களை அதீதமாய் நேசிப்பவனாகவும்
பிரிதொரு நேரம்
மனிதர்கள் தீவிரமாய் வெறுப்பவனாகவும்
என்னை நானே கண்டிருக்கிறேன்.

என் அதிமேதாவித் தனத்தை கிழித்தெரியும் பயணஙகளும் என் பாதையில் உண்டு.

எனது பயண அனுபவத்தில் வரலாறு வாசிப்பு/ புரிதல் என்பது...

எனது பயண அனுபவத்தில் வரலாறு வாசிப்பு/ புரிதல் என்பது எப்படிபட்ட விழிப்புணர்வை நம்மிடையே (கேட்பவரிடையே) கோருகிறது என்பதைப் பற்றி சிறு தகவல் ஒன்றை பகிர்கிறேன்.

விஜயநகரம் (விஜயநகரப் பேரரசு)
பாஞ்சாலங்குறிச்சி (கட்டபொம்மன்)
நெற்கட்டான்செவல் (பூலித்தேவன்
இம்மூன்றும் உருவானதற்கு சொல்லப்படும்
வாய்மொழி வரலாறு (கதை) ஒன்றே.

"முயல் வேட்டை நாயை எதிர்த்த இடத்தில் உருவானது"

இதிலிருந்து எனது பயணங்கள் ஒன்றைத் தெளிவாக்கியது. அதாவது...

"நம்பிக்கைகளைப் கதைகளாகப் புனைந்து பரப்புவார்கள். மெல்ல கதைகள் புராணவடிவம் பெறும். பின் புராணம் வரலாறாக திரிபு பெறும். திரிக்கப்பட்ட வரலாறு கிடைக்கும் சான்றுகள் கொண்டு மெறுகேற்றப்பட்டு உறுதிபடுத்தப்படும். உறுதிப்படுத்தப்பட்ட வரலாறு நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலைமுறைக்குள் திணிக்கப்படும்.
இதற்கான கருவிகளே மதங்களும், புனித புத்தகங்களும், கலாச்சாரங்களும்.... இத்தியாதி.....

பாளையங்களும் பாளையக்காரர்களும்

------------------------------------- Polingars and their territories - historical development and significance as a continuation of Nayak...